பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
169

37

37. ஆயியன் னாய்கவ லேல்அக
        லேமென் றளித்தொளித்த
   ஆவியன் னார்மிக்க வாவின
        ராய்க்கெழு மற்கழிவுற்

   றாவியன் னார்மன்னி யாடிடஞ்
        சேர்வர்கொலம்பலத்தெம்
   ஆவியன் னான்பயி லுங்கயி
        லாயத் தருவரையே.