373. இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச் சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள் பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே.