375. விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே.