பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
598

377

377. அன்புடை நெஞ்சத் திவள்பே
        துறஅம் பலத்தடியார்
    என்பிடை வந்தமிழ் தூறநின்
        றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
        தன்னஞ் சலஞ்சலத்தின்
    வன்பெடை மேல்துயி லும்வய
        லூரன் வரம்பிலனே.