பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
602

380

380. தேன்வண் டுறைதரு கொன்றையன்
        சிற்றம் பலம்வழுத்தும்
    வான்வண் டுறைதரு வாய்மையன்
        மன்னு குதலையின்வா
    யான்வண் டுறைதரு மாலமு
        தன்னவன் வந்தணையான்
    நான்வண் டுறைதரு கொங்கையெவ்
        வாறுகொ னண்ணுவதே.