பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
603

381

381. கயல்வந்த கண்ணியர் கண்ணினை
        யால்மிகு காதரத்தால்
    மயல்வந்த வாட்டம் அகற்றா
        விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
        தோனம் பலம்நிலவு
    புயல்வந்த மாமதிற் றில்லைநன்
        னாட்டுப் பொலிபவரே.