பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
609

385

385. உடைமணிகட்டிச் சிறுதே
        ருருட்டி யுலாத்தருமிந்
    நடைமணி யைத்தந்த பின்னர்முன்
        நான்முகன் மாலறியா
    விடைமணி கண்டர்வண் தில்லைமென்
        தோகையன் னார்கண்முன்னங்
    கடைமணி வாள்நகை யாயின்று
        கண்டனர் காதலரே.