பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
617

392

392. மின்றுன் னியசெஞ் சடைவெண்
        மதியன் விதியுடையோர்
    சென்றுன் னியகழற் சிற்றம்
        பலவன்தென் னம்பொதியில்

    நன்றுஞ் சிறியவ ரில்லெம
        தில்லம்நல் லூரமன்னோ
    இன்றுன் திருவரு ளித்துணை
        சாலுமன் னெங்களுக்கே.