பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
620

395

395. இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
        நிலையிமை யோரிறைஞ்சுஞ்
    செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
        பலவர்தென் னம்பொதியிற்
    புயன்மன்னு குன்றிற் பொருவேல்
        துணையாப்பொம் மென்இருள்வாய்
    அயன்மன்னும் யானை துரந்தரி
        தேரும் அதரகத்தே.