பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
623

397

397. சிலைமலி வாணுத லெங்கைய
        தாக மெனச்செழும்பூண்
    மலைமலி மார்பி னுதைப்பத்தந்
        தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
        கள்வரில் என்னவுன்னிக்
    கலைமலி காரிகை கண்முத்த
        மாலை கலுழ்ந்தனவே.