பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
624

398

398. ஆறூர் சடைமுடி அம்பலத்
        தண்டரண் டம்பெறினும்
    மாறூர் மழவிடை யாய்கண்
        டிலம்வண் கதிர்வெதுப்பு
    நீறூர் கொடுநெறி சென்றிச்
        செறிமென் முலைநெருங்கச்
    சீறூர் மரையத ளிற்றங்கு
        கங்குற் சிறிதுயிலே.