பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
627

400

400. காரணி கற்பகங் கற்றவர்
        நற்றுணை பாணரொக்கல்
    சீரணி சிந்தா மணியணி
        தில்லைச் சிவனடிக்குத்
    தாரணி கொன்றையன் தக்கோர்
        தஞ்சங்க நிதிவிதிசேர்
    ஊருணி உற்றவர்க் கூரன்மற்
        றியாவர்க்கும் ஊதியமே.