41. காவிநின் றேர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத் தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென் ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே.