42. அகலிடந் தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின் இகலிடந் தாவிடை யீசற்றொ ழாரினின் னற்கிடமாய் உகலிடந் தான்சென் றெனதுயிர் நையா வகையொ துங்கப் புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே.