46. நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந் தெண்கடல்வையமு மெய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங் கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே.