47. சூளா மணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க் காளா யொழிந்ததென்னாருயிர் ஆரமிழ் தேயணங்கே தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னை துன்னும் நாளார் மலர்ப்பொழில் வாயெழி லாயம் நணுகுகவே.