பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
183

49

49. என்னறி வால்வந்த தன்றிது
        முன்னும்இன்னும்முயன்றால்
   மன்னெறி தந்த திருந்தன்று
        தெய்வம் வருந்தல்நெஞ்சே

   மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
        பிரான்வியன் தில்லைமுந்நீர்
 
   பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
        மின்றோய் பொழிலிடத்தே.