பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
188

52

52. இருங்களி யாயின் றியானிறு
        மாப்பஇன் பம்பணிவோர்
   மருங்களி யாஅன லாடவல்
        லோன்றில்லை யான்மலையீங்
   கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
        மதத்திரு கோட்டொருநீள்
   கருங்களி யார்மத யானையுண்
        டோவரக் கண்டதுவே.