53. கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் இருங்கண்ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின் மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே.