பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
190

54

54. சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
        பங்கன்றன் சீரடியார்
   குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
        தோன்கொண்டு தானணியுங்

   கலம்பணி கொண்டிடம் அம்பலங்
        கொண்டவன் கார்க்கயிலைச்
   சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
        குரைமின்கள் சென்னெறியே.