55. ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன் கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை இருங்கடம் மூடும் பொழிலெழிற் கொம்பரன் னீர்களின்னே வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி யோவிங்கு வாழ்பவர்க்கே.