பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
133

6

6.  வளைபயில் கீழ்கட னின்றிட
      மேல்கடல் வான்நுகத்தின்
  துளைவழி நேர்கழி கோத்தெனத்
      தில்லைத்தொல் லோன்கயிலைக்
  கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
      கண்ணியைக் கொண்டுதந்த
  விளைவையல் லால்விய வேன்நய
      வேன்தெய்வ மிக்கனவே.