62. நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே.