64. அளியமன் னும்மொன் றுடைத்தண்ண லெண்ணரன் தில்லையன்னாள் கிளியைமன் னுங்கடி யச்செல்ல நிற்பிற் கிளரளகத் தளியமர்ந் தேறின் வறிதே யிருப்பிற் பளிங்கடுத்த ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று தோன்று மொளிமுகத்தே.