68. அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத் திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகுமுனக்கவளே.