பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
134

7

7.  ஏழுடையான்பொழி லெட்டுடை
       யான்புய மென்னைமுன்னாள்
  ஊழுடை யான்புலி யூரன்ன
       பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
  சூழுடை யாயத்தை நீக்கும்
       விதிதுணை யாமனனே
  யாழுடை யார்மணங் காணணங்
       காய்வந் தகப்பட்டதே.