72. ஆவா விருவ ரறியா அடிதில்லை யம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித் தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே.