74. காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே.