77. நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத் தரன்தில்லை மல்லற்கண் ணார்ந்தபெண்ணை உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே.