பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
224

78

78. அடிச்சந்த மால்கண் டிலாதன
        காட்டிவந் தாண்டுகொண்டென்
   முடிச்சந்த மாமல ராக்குமுன்
        னோன்புலி யூர்புரையுங்
   கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
        கன்னி யனநடைக்குப்
   படிச்சந்த மாக்கும் படமுள
        வோநும் பரிசகத்தே.