பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
225

79

79. யாழு மெழுதி யெழின்முத்
        தெழுதி யிருளின்மென்பூச்
   சூழு மெழுதியொர் தொண்டையுந்
        தீட்டியென் தொல்பிறவி
   ஏழு மெழுதா வகைசிதைத்
        தோன்புலி யூரிளமாம்
   போழு மெழுதிற்றொர் கொம்பருண்
        டேற்கொண்டு போதுகவே.