8. சொற்பாலமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே.