83. வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத் தெரியே முரையான் பிரியா னொருவனித் தேம்புனமே.