85. சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே.