88. மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஓவியந் தோன்றுங் கிழிநின் னெழிலென் றுரையுளதால் தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான் பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே.