பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
137

9

9. உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
      சிற்றம் பலத்தொருத்தன்
  குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
      வாயிக் கொடியிடைதோள்

புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்

      போகம்பின் னும்புதிதாய்
  மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
      போல வளர்கின்றதே.