90. தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர் பூமென் தழையுமம் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப ஆமென்றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங் காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே.