92. முன்றகர்த் தெல்லா விமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச் சென்றகத் தில்லா வகைசிதைத் தோன்றிருந் தம்பலவன் குன்றகத் தில்லாத் தழையண் ணறந்தாற் கொடிச்சியருக் கின்றகத் தில்லாப் பழிவந்து மூடுமென் றெள்குதுமே.