பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
247

94

94. எழில்வா யிளவஞ்சி யும்விரும்
        பும்மற் றிறைகுறையுண்
   டழல்வா யவிரொளி யம்பலத்
        தாடுமஞ் சோதியந்தீங்
   குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
        றாலத்துக் கோலப்பிண்டிப்
   பொழில்வாய் தடவரை வாயல்ல
        தில்லையிப் பூந்தழையே.