96. நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை யதளம் பலவன் நெடுவரையே.