8. வானச் சிறப்பு
1அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.
உரை
   
2வரை இடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரை இல்லை எந்தை கழுமணி யாறே.
உரை