தொடக்கம் |
|
|
1 | எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தன ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம் வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன் அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளும் குறுகிப் பிழிந்தன போலத் தம் பேர் இடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம் அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார் சிவலோக நகர்க்குப் புறம் அறியார் பலர் பொய்ம் மொழிகேட்டு மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம் செய்யாதவர் தம் பாலது ஆகும் உரும் இடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கல் தாழ கிலாவே. |
|
உரை
|
|
|
|
|
5 | பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே. |
|
உரை
|
|
|
|
|
6 | வழி நடப்பார் இன்றி வானோர் உலகம் கழி நடப்பார் நடந்து ஆர் கருப்பாரும் அழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட வழி நடக்கும் அளவு வீழ்ந்து ஒழிந்தாரே. |
|
உரை
|
|
|
|
|
7 | கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே. |
|
உரை
|
|
|
|
|
8 | இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
9 | கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யில் பசு அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
10 | செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லம் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே. |
|
உரை
|
|
|
|