தொடக்கம்
முதல் தந்திரம்
6. கொல்லாமை
1
பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர்
மற்று ஓர் அணுக்களைக் கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
உரை
2
கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில் என்று தீவாய் நரகு இடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
உரை