தொடக்கம் |
|
|
முதல் தந்திரம் 8. பிறன் மனை நயவாமை |
1 | ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
2 | திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பு ஏறிக் கருத்து அறியாதவர் கால் அற்றவாறே. |
|
உரை
|
|
|
|
|
3 | பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும் இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள் மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே. |
|
உரை
|
|
|
|