தொடக்கம் |
|
|
முதல் தந்திரம் 9. மகளிர் இழிவு |
1 | இலை நல ஆயினும் எட்டி பழுத்தால் குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல் விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே. |
|
உரை
|
|
|
|
|
2 | மனை புகுவார்கள் மனைவியை நாடில் சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் கனவு அது போலக் கசிந்து எழும் இன்பம் நனவு அது போலவும் நாட ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|
|
3 | இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் புயன் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும் மயல் உறும் வானவர் சார் இது என்பார் அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | வையகத்தே மடவா ரொடும் கூடி என் மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள் மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே. |
|
உரை
|
|
|
|
|
5 | கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில் ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத் தாழத் துடக்கித் தடுக்க இல்லா விடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. |
|
உரை
|
|
|
|