முதல் தந்திரம்

10. நல்குரவு

1புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே.
உரை
   
2பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே.
உரை
   
3கல்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கு அற்றவாறே.
உரை
   
4தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.
உரை
   
5அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண் இலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே.
உரை