முதல் தந்திரம்

13. கல்வி

1குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.
உரை
   
2கற்று அறிவாளர் கருதிய காலத்துக்
கற்று அறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்று அறிவாளர் கருதி உரை செய்யும்
கற்று அறி காட்டக் கயல் உள ஆக்குமே.
உரை
   
3நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே.
உரை
   
4கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.
உரை
   
5துணை அதுவாய் வரும் தூய நல் சோதி
துணை அதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே.
உரை
   
6நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே.
உரை
   
7ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.
உரை
   
8வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே.
உரை
   
9பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேர் இன்பம் உற்று நின்றாரே.
உரை
   
10கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி
அடல் விடை யேறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே.
உரை