தொடக்கம் |
|
|
முதல் தந்திரம் 14. கேள்வி கேட்டு அமைதல் |
1 | அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் திறம் கேட்டும் பெற்ற சிவ கதி தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்த பின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | மாயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் அயன் பணி கேட்பது அரன் பணியால் ஏ சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன் பணி கேட்பது பற்று அதுவாமே. |
|
உரை
|
|
|
|
|
4 | பெருமான் இவன் என்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும் அருமாதவத்து எங்கள் ஆதிப் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
5 | ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
6 | விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கு இன்றி எண் இலி காலம் அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | சிறியார் மணல் சோற்றில் தேக்கு இடுமாப் போல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
8 | உறு துணை ஆவது உயிரும் உடம்பும் உறு துணை ஆவது உலகு உறு கேள்வி செறி துணை ஆவது சிவன் அடிச் சிந்தை பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே. |
|
உரை
|
|
|
|
|
9 | புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழ நின்று ஆதியை ஓதி உணராக் கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே. |
|
உரை
|
|
|
|
|
10 | வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே. |
|
உரை
|
|
|
|