தொடக்கம்
இரண்டாம் தந்திரம்
1. அகத்தியம்
1
நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து
கெடு கின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
உரை
2
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம் செய் மேல் பால் அவனொடு
மங்கி உதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளிதானே.
உரை