தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 3. இலிங்க புராணம் |
1 | அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடி சேர் மலை மகனார் மகள் ஆகித் திடமார் தவம் செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே. |
|
உரை
|
|
|
|
|
2 | திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை அரியன் என்று எண்ணி அயர் உற வேண்டா பரி உடை யாளர்க்குப் பொய் அலன் ஈசன் பரிவொடு நின்று பரிசு அறிவானே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | தாங்கி இருபது தோளும் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின் நீங்கா அருள் செய்தான் நின் மலன் தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்துத் தாஞ் சென்று நாடி இறைவா நம என்று கும்பிட ஈடு இல் புகழோன் எழுக என்றானே. |
|
உரை
|
|
|
|